பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் Add to donation

Image

‘பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்’ என்னும் இந்நூல் ஒரு கவிதைப் பூஞ்சோலை. இச் சோலையில் மலர்ந்துள்ள மலர்களைக் காட்டிக்கொடுத்து இது வாசனையுடையது, இது வாசனை இல்லாதது என்று சொல்லிக்காட்ட வேண்டிய நிலை இல்லாமல் எல்லா மலர்களுமே வாசனை பரப்பி மணம் கமழச் செய்கின்றன. மணம் கமழச் செய்திருப்பவர் எழுத்துலகில் முன்னணியில் திகழும் வெ.இறையன்பு ஆவார். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருக்கும் அவர் சமுதாயத்தைப் பலகோணங்களில் அணுகி, பார்வையிட்டு, அனுபவித்துப் பல கவிதை வரிகளை வார்த்துத் தந்திருக்கிறார்.

வாய்க்கால் மீன்கள் Add to donation

Image

கவிஞர் இறையன்பு இந்திய ஆட்சித்துறை அதிகாரி. மனித நேயமிக்க தனது கருத்து நேர்மைக்குக் கவிதையை நல்ல ஊடகமாகப் பயன்படுத்தியிருக்கிறார். கவிதை என்பது போதை தரும் சொற்களில் இல்லை. வெறும் ஓசைகளின் ஒழுங்கமைப்பில் இல்லை. இது தன்னைச் சுற்றியுள்ள உலகின் சமுதாய அசைவுகளை கவிஞன் எப்படி நுட்பமாகக் கவனிக்கிறான் என்ற பார்வையில் தான் இருக்கிறது என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார். இவருடைய படைப்புகளும், கவிதை உலகின் ஆரோக்கியமான நடவடிக்கைகளுக்கும் கட்டாயம் பயன்படும் என்று நம்பலாம். இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பான “வாய்க்கால் மீன்கள்” இதனை உறுதி செய்கிறது.

வைகை மீன்கள் Add to donation

Image

இந்தக் காதல் காவியத்தினுடே அடி அடியாய், அணு அணுவாய்ப் பயணம் செய்யச் செய்ய வாசக நெஞ்சில் இறுக்கமும் அழுத்தமும் கூடிக்கொண்டே போகின்றன... என்ன நேரும் என்ன நேரும் என்பதாக...

ஜார்ஜ் சிமனான் என்ற பிரெஞ்சு நாவலாசிரியரின் கதை சொல்லும் நேர்த்தி எப்படியிருக்கும் என்பதைச் சொல்லும்போது இப்படிச் சொல்லுவார்கள்... “கதையின் முடிவு நமக்குத் தெரியும்., ஆனாலும் ஒரு பரபரப்பு., ரயில் வருகிறது என்று தெரிந்தாலும் அது நெருங்க நெருங்க பிளாட்பாரத்தில் ஏற்படும் பரபரப்பு போல...” என்பார்கள்.

சறுக்குமரம் Add to donation

Image

காத்திருத்தல்

காத்திருப்பவர்களே பூத்திருப்பவர்கள்;

வேகமெடுப்பவர்கள் வெந்துவிடுபவர்கள்

சிலுசிலுவென வேரை நனைக்கும்

பயிர்களைக் காட்டிலும்

மழைக்காக வானம் பார்க்கும் செடிகளில்

தவழ்ந்தோம்

மகிழ்ந்தோம்

சின்னச் சின்ன வெளிச்சங்கள் Add to donation

Image

நூலாசிரியர் திரு. இறையன்பு அவர்களின் எழுத்து ஓர் எதிர்காலத்தின் உச்சியைத் தொட்டுவிட்டுத் திரும்பும்போது அது இளைஞர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு கிடைத்த அடித்தளம் என்றே கூறலாம். அதன்படி சின்ன சின்னச் சிந்தனைகள் தத்துவார்த்தங்களாய் இந்நூலெங்கும் விளைந்து கிடப்பதைக் காணமுடிகின்றது. சிறுவர் - பெரியவர் வாழ்வில் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் அவருக்கே உரிய பாணியில் அழகான சொற்சித்திரமாய் வடித்துத் தந்துள்ளார்.

சின்னச் சின்ன மின்னல்கள் Add to donation

Image

சுருக்கமாகவும் சுரீர் என்றும் எழுதுவது ஒரு கலை. அது எல்லாருக்கும் அவ்வளவு எளிதில் கைவரப் பெறுவதில்லை. சமுதாய நடப்புகள், அவலங்கள், தேவைகள் முதலியன குறித்து நூறு பக்கங்களில் மிகச் சிறப்பாக எழுதுகின்ற எழுத்தாளர்கள்கூட, அதே விஷயத்தை அதன் ஆழமும் வீச்சும் குறையாமல் ஒரு பக்கத்திற்குள் எழுதவேண்டும் என்றால் மிகவும் தயங்குவார்கள்; எப்படி விஷயத்தை ஒரு பக்கத்திற்குள் அடக்குவது என்று திகைப்பார்கள்.

ஆத்தங்கரை ஓரம் Add to donation

Image

அந்தக் காலத்தில் உயிர்களைக் காப்பது கடவுள் என்று கூறி, கோயில் கட்டுவதற்குக் கூடக் கர்ப்பிணிப் பெண்களையே பலியிட்டதாக வரலாறு கூறுகிறது. அணை கட்டுவதற்கும் அதே மனிதப் பலி நடத்திக் காட்டப்படுகிறது. மனிதர்கள் மனிதர்களாக இல்லை என்பதும் அரசு அதிகாரிகள் பலர் அன்புடையவர்களாக இல்லை என்பதும் இந்நாவலில் குத்திக்காட்டப்படுகிறது.

அணை கட்ட ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே பல கிராமங்கள் நீரில் மூழ்கும் நிலை நேர்ந்தது. அணைக்கு எதிராக அரசாங்க அனுதாபமோ, எதிர்க்கட்சிகளின் அனுதாபமோ எழவில்லை.

சாகாவரம் Add to donation

Image

மனம் சலனமற்று இருந்தது. ‘இனி எதுவுமே ஞாபகம் வராது’ என்பது மட்டும் புரிந்தது. கடந்த காலம் முழுமையாகக் கழன்று விட்டது என்பது மட்டும் புரிந்தது. அது அவனிடம் எந்தத் துக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தன் இருத்தலை ஒரு சிலையின் இருத்தலாக உணர்ந்தான். நீரில்லாத ஏரியின் சலனமற்ற நிலையில் அவன் இருந்தான். அந்தத் தீவு முழுவதும் மயான அமைதி வியாபித்திருப்பதாகப்பட்டது. – இது இறையன்புவின் அடுத்த நாவலில் இடம்பெறும் தத்துவார்த்த வாசகங்கள்.

பெரும்பாலும் கட்டுரை எழுதுவதுபவராக அறியப்பட்ட இறையன்பு, அண்மைக்காலமாக படைப்புலகில் அக்கறை செலுத்தி எழுதியுள்ள படைப்புகளின் தொடர்ச்சியாக வெளிவருகிறது அவரது ‘சாகாவரம்’ என்கிற இந்த இரண்டாவது நாவல். அவர் எழுதிய முதல் நாவல் ‘ஆத்தங்கரை ஓரம்’ அணைக்கட்டு குறித்த பல பிரச்சனைகளை முன்வைத்தது. இந்த நாவல், மரணம் குறித்த விசாரணையாக உருவெடுத்திருக்கிறது.

அவ்வுலகம் Add to donation

Image

இறையன்புவின் இந்த நாவல் மகத்தான மனித வாழ்வை அற்ப காரணங்களுக்காகச் சீரழித்துக்கொள்ளும் மனிதர்களின் அறியாமையைப்பற்றிப் பேசுகிறது. தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் மனிதர்கள் ஒரு நாள் பதிலளிக்க முடியாத கேள்விகளின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்பதைப்பற்றிப் பேசுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இருள் எனத் தோன்றும் மரணமே -

அரிதாரம் Add to donation

Image

ஒரு கவிஞன் கதை எழுதினால் அவன் சமைக்கும் படைப்பின் ருசி எப்படி தனிச்சுவையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று.

பத்தொன்பது சிறுகதைகளும் ரகசியமாய் வந்து மனதில் இடம்பிடித்தது, மொத்தமாய் சிறப்புத்தன்மை பெற்றாலும்; ஒரு சில கதைகள் இங்கே சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

‘தலைமாணாக்கன்’ ஒரு குருவிற்கும், சிஷ்யனுக்கும் உள்ள பற்று என்ன என்பதை சிஷ்யன் தன் கை கட்டை விரலை குருவிற்கு காணிக்கையாய் அளிக்கும் விசித்திரம், உலகிற்கு கூறும் நற்சிந்தனையாகவே படுகிறது.

நரிப்பல் Add to donation

Image

சராசரி மனித வாழ்விலிருந்து விலகிப்போனவர்களின்

காலடித் தடத்தையும் – பச்சைமரத்தில் அறைந்த ஆணி

போல் அசையாமல் நின்றுகொண்டிருக்கும் அன்றாடங்

காய்ச்சிகளின் வாழ்வினையும் படம்பிடித்துக் காட்டுகிறது

இச்சிறுகதைத் தொகுப்பு.

‘இரங்கல்’ சிறுகதையிலிருந்து ‘சமர்ப்பணம்’ வரையிலும்

வாசிக்கும் போது ஒரு ரயில்பெட்டியில் பயணம்

செய்துகொண்டு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு

கதாபாத்திரத்தையும் சந்தித்துவிட்டு கீழிறங்கிய

திருப்தி ஏற்படுகிறது.

அழகோ அழகு Add to donation

Image

கட்டுரைகள் மற்றும் வாழ்வியல்

நூல்களுக்காகவே பெரிதும்

அறியப்பட்டு வந்த வெ.இறையன்பு

அண்மைக்காலமாகப் படைப்பிலக்கியத்தில்

தீவிரம் காட்டி வருகிறார். ஏற்கனவே அவருடைய சிறுகதைகளின் தொகுப்பு ‘அரிதாரம்’ என்ற பெயரில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. அதற்குப் பிறகு ‘பூனாத்தி’ எனும் சிறுகதைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. அவற்றின் தொடர்ச்சியாக ‘நரிப்பல்’, ‘அழகோ அழகு’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளிவருகின்றன.

பூனாத்தி Add to donation

Image

இதுநாள் வரை அதிக அளவில் கட்டுரைகளையே எழுதி வந்து, இப்பொழுது படைப்பிலக்கியத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். அவ்வகையில் அனுபவங்களையும் நடப்பனவற்றையும் வைத்து எழுதப்பட்டவையே இந்தச் சிறுகதைத் தொகுதி. எனவே இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தனிமையில் ஒரு வரவு எத்தனை மகிமைகளை ஏற்படுத்த முடியும் என்பதை இக்கதைத் தொகுப்பில் உள்ள பூனாத்தி என்ற கதை விவரிக்கிறது. அந்தக் கதையே இத்தொகுப்புப் பெயராகிறது.

பத்தாயிரம் மைல் பயணம் Add to donation

Image

மனித வாழ்வில் பயணங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை எண்ணிப் பார்த்தால் சிறப்பாக இருக்கும். இருக்கிறது. அதை திரு. இறையன்புவின் வழி தரிசிக்கும் போது அந்த ஆச்சரியம் பல மடங்காக விரிகிறது, தொலைநோக்கியின் வழியே நட்சத்திர மண்டலங்களைப் பார்ப்பது போல. அதே நேரம் அவை சிந்தனையையும் தூண்டுகின்றன, ஒரு நுண்ணுயிரை சூட்சம தரிசினியின் மூலம் காண்பதைப் போல.

அது திரு. இறையன்புவின் சொல்லிற்குள்ள வலிமை. கவிதையானாலும், கதையானாலும், கட்டுரையானாலும், உரையானாலும், ஒன்றை ஒரே நேரத்தில் விரிவாகவும் நுட்பமாகவும் சித்தரிக்கும் ஆற்றல் அவருக்குண்டு. நிறைய விவரங்களை எண்ணற்ற ஓவியங்களில் சித்தரிக்கும் மொகலாயச் சிற்றோவியங்களை (Mughal Miniatures) போன்றது அவரது அணுகுமுறை.

சுவாரசியமும், விவரிப்பும் ஒன்றுக்கொன்று முரணானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கற்பனை மட்டுமல்ல உண்மைகளும் கூட சுவாரஸ்யமாக இருக்க முடியும். அதற்கு இந்த நூலே சாட்சி.

படிப்பது சுகமே Add to donation

Image

எண்ணத்தில் தெளிவும் உறுதியும் இருப்பவர்கள் அதிக அடித்தல், திருத்தல் இல்லாமல் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவார்கள். கடைசி நேரத்தில் படிப்பது குழப்பத்தை விளைவிக்கும். நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று எண்ணித் தேர்வு எழுத வேண்டும். படிப்பது ஒரு நாளும் பாழாவதில்லை. நம்மை சுற்றியுள்ளவர்களின் உதடுகளில் புன்னகையைச் சேர்ப்பதே படிப்பின் முக்கிய நோக்கம்.

மேற்கண்ட கருத்துகளை நிகழ்வு எடுத்துக்காட்டுகளுடனும், கதை விளக்கங்களுடனும் இந்நூல் எடுத்துரைக்கிறது. உண்மையிலேயே இந்நூல் தேர்வுக்கான திறவுகோல்தான். இந்நூலைப் படிப்பவர்கள் வெற்றிப் படிக்கட்டுகளை அமைத்துக் கொள்வார்கள் என்பது உறுதி.

ஐ.ஏ.எஸ் தேர்வும் அணுகுமுறையும் Add to donation

Image

நூறு கோடிக்கும் மேலாக மக்கள் தொகை உடையது நம் நாடு. இனங்கள், சாதிகள், மதங்கள் எனப் பல்வேறாகப் பிரிந்து கிடக்கும் நம் நாட்டில் நிர்வாகச் சேவை மக்களுக்கான முன்னேற்றத்திற்காக, நலவாழ்விற்காக இயங்குதல் வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நற்பலன்கள் கிட்டும். இதனை நோக்கமாகக் கொண்டவைதான் ஒதுக்கீடுகள். ஒதுக்கீடு இல்லையென்றால் பாமரர் இடம் பெற முடியாது; சமத்துவம் கானல் நீராகும். இதனை உள்ளத்தில்கொணடு எல்லாரும் I.A.S. தேர்வு எழுத வேண்டும். மக்கள் பயன் அடையவேண்டும் என்ற நோக்கத்தில் “ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்” என்னும் நூலை வெ.இறையன்பு எழுதியுள்ளார்கள். நாட்டின் திறைமையான நிர்வாகி, தமிழறிஞர், எல்லாரும் போற்றத்தக்க தகைமையாளர், எளிய தமிழில் தேர்வுக்கு எப்படி, எப்பொழுது ஆயத்தம் செய்ய வேண்டும், எதை எதைப் படிக்க வேண்டும், எவ்வளவு படிக்க வேண்டும், எப்படித் திட்டமிட வேண்டும் என அருமையாக இந்நூலில் கூறியுள்ளார்.

ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள் Add to donation

Image

ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் ஒளிந்திருக்கும் கனவுகளில் – ஒன்று ஐ.ஏ.எஸ் ஆவதுக் குறித்துதாம். அது நனவாகுவதற்கு என்னென்ன வழிமுறைகள் – பயிற்சிகள் – வினா - விடைகள் குறித்த அனைத்து சிறப்பம்சங்களையும் இங்கே பாடமாகத் தந்துள்ளார் நூலின் ஆசிரியர் திரு.இறையன்பு.

ஐ.ஏ.எஸ் என்பது செல்வந்தர்களுக்கு மட்டுமல்ல. ஏழைக்கும் – பாமரனுக்கும் முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை எனும் சித்தாந்தத்தை முன்வைக்கிறது. பாடம் ஒவ்வொன்றிலும் விளக்கமளித்து அதற்கான சம்பவங்கள் அல்லது அனுபவங்களை உதாரணமாய்ச் சொல்லும் விதம் அருமை.

“ஐ.ஏ.எஸ் வெற்றிப் படிக்கட்டுகள்” எனும் இந்நூலில் முக்கியமாய் தெளிக்கப்பட்டிருக்கும் அல்லது விதைக்கப்பட்டிருக்கும் உள்ளுணர்வு: வெற்றியெனும் மூலமந்திரமே. முயற்சிகளின் படியேறி தளராமல், பின்னோக்காமல் முன்னேறினால் ஐ.ஏ.எஸ் ஆவது உறுதி எனும் உன்னதக் கருத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

உன்னோடு ஒரு நிமிஷம் Add to donation

Image

சுட்டி விகடனில் எழுதுவதற்கு வாய்ப்பு வந்தபோது சற்று பதற்றமாகத்தான் இருந்தது. மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நிறைய எழுதியும் பேசியும் இருக்கிறேன் என்றாலும், குழந்தைகளுக்காக எழுதுவது என்பது எவ்வளவு சிரமம் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். நாமே குழந்தைப் பருவத்துக்குப் பயணப்பட சம்மதிக்கும் போதுதான் அதைச் செவ்வனே செய்யமுடியும் என்பதை நான் உணர்வேன். அவர்கள் அருகிலேயே அமர்ந்துகொண்டு உரையாடுவதைப் போல பகிர்ந்து கொள்வதுதான் எழுதும் நோக்கத்தை நிறைவேற்றி வைக்கும். அந்த வகையில் ‘உன்னோடு ஒரு நிமிஷம்!’ என்கிற தொடர் எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது.

வாழ்க்கையே ஒரு வழிபாடு Add to donation

Image

ஆன்மிகத்தை ஊறுகாயாக இல்லாமல் உணவாக மாற்றிக் கொள்ளும்போது வாழ்க்கை புதிய திசையில், அதிக விசையுடன் பயணிப்பதைப் பார்க்க முடியும். அப்போது ஒவ்வொரு நிகழ்வையும் விழிப்புணர்வுடன் அணுக முடியும். அதை வெகுநாட்களாக எழுதவேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. வாய்ப்பு கிடைத்தபோது ‘வாழ்க்கை ஒரு வழிபாடு’ என்கின்ற தொகுப்பாக மலர்ந்தது. மதங்களைத் தாண்டியது ஆன்மிகம் என்பதை உணர்த்த எம்மதமும் சாராமல் அனைத்து மார்க்கங்களின் சாரத்தையும் உள்ளடக்கியதாக இது விரிவடைந்த போது எனக்கு உண்மையாக திருப்தி கிட்டியது.

திருப்பாவைத் திறன் Add to donation

Image

பாவை தோன்றிய காலத்துக்கும் இன்று நாம் வாழும் பரபரப்பு காலத்துக்கும் நிறைய வேறுபாடுகள். அன்றிருந்த பக்திக்கும் இன்றிருக்கும் பக்திக்கும் நிறைய மாறுபாடுகள். எதையும் கணினி வைத்துக் கணக்குப் பார்க்கும் அறிவியல் காலம் இது. அறிவியல் தொழில்நுட்பக் காலத்தின் தளத்தில் கால்வைத்துக் கொண்டு, பாவைப் பாடல்களை பயன்படும் தன்மையில் நயம் பாராட்டினால் எப்படியிருக்கும்? இந்தப் புதுவித இலக்கியப் பரிசோதனை முயற்சியின் சிறந்த விளைவே, இன்று உங்கள் கரங்களில் திகழ்ந்து கொண்டிருக்கும் இறையன்புவின் ‘திருப்பாவைத் திறன்’.

முகத்தில் தெளித்த சாரல் Add to donation

Image

அண்மையில் சாகித்ய அகாதமி நடத்திய கவிதைத் திருவிழாவில் கலந்துகொண்டபோது ஓர் அன்பர் இடைமறித்து நீங்கள் ஏன் இப்போது ஹைக்கூ எழுதுவதில்லை?... என்று கேட்டார்.

ஹைக்கூ பற்றி அதிகமாகப் புரிந்துவிட்டது... என்று பதில் சொன்னேன். அவருக்கு என் பதில் புரிந்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் நிஜம் அதுதான், ஹைகூ அத்தனை நுட்பமானது. எளிமையும் ஆழமும் இணைந்தது. அதனாலேயே ஹைகூவை உணர்வு இலக்கியம் என்று இறையன்பு எழுதும்போது சட்டென்று ஏற்றுக்கொள்ள முடிகிறது.

இதைச் சுலபமாக, ஆழ்ந்த கவனிப்புகளோடு இவரால் எழுத முடிந்ததற்குக் காரணம் படிப்பாற்றலும், வாழ்வனுபவமும்.

ஒரு பத்து நிமிட தொலைக்காட்சி பேச்சிற்கு எத்தனை புத்தகங்களைப் படித்துக் குறிப்பெடுக்கிறார் என்பதை ஒருமுறை நேரில் பார்த்தபோது எனக்கு மயக்கமே வந்துவிட்டது.

ஏழாவது அறிவு (முதல் பாகம்) Add to donation

Image

நூலாசிரியர் இறையன்பு அவர்கள் ஏழாவது அறிவுக்கு “மனம் என்பது சிந்தனைகளின் தொகுப்பு. சிந்தனைகளின் மூலம் சிந்தனைகளைக் கடக்கக் கற்றுக் கொள்வதற்கு ஆறாவது அறிவில்தான் சாத்தியம். ஆறாவது அறிவையும் தாண்டி சிந்தனைகளற்ற நிலைக்குச் செல்லவேண்டும். அது ஏழாவது அறிவாக உதயமாகிறது. ஏழாவது அறிவு என்பது அறிவு அல்ல அனுபவம். அப்போது இறைமையோடு இயைகிற அனுபவம் ஏற்படுகிறது” என்று விளக்கம் தருகிறார்.

ஏழாவது அறிவு (இரண்டாம் பாகம்) Add to donation

Image

நாம் துயரத்தைத் திசைதிருப்ப நினைக்கும்போதெல்லாம் அது அதிகரிக்கவே செய்கிறது. துன்பத்தைத் தாண்டி மேலே செல்ல முற்படும்போது நமக்கான வழிகள் தென்படுகின்றன. பணி செய்யாமல் வெறும் உல்லாசத்தை மட்டும் அனுபவிக்கின்ற எல்லா வாழ்க்கையுமே நரக வாழ்க்கைதான். தீய வழிகளில் சத்தியத்தை நிலைநாட்ட முடியாது. குறுக்கு வழிகளில் இலட்சியத்தை அடையலாம் என்று நினைப்பது மதுவை அருந்தி உடல் வலியைப் போக்கிக் கொள்ளலாம் என்பதைப் போன்ற அறிவற்ற செயல். கரும்பாய் இருந்தால் நசுக்கப்படுவோம் என்பதால் எட்டிக்காயாய் யாரும் தீண்டத் தகாததாய் இருக்கக் கூடாது.

ஏழாவது அறிவு (மூன்றாம் பாகம்) Add to donation

Image

இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் தமிழுலகத்தில் தனியிடத்தைப் பிடித்து வாசகர் உள்ளங்களில் கருத்துவிதைகளை விதைத்து நல்ல எதிர்காலம் என்னும் அறுவடைக்கு வழிவகுத்து வருகிறார். பல அரிய படைப்புகளை ஆக்கித்தந்து எழுத்துலகில் தனி முத்திரை பதித்துக்கொண்டிருக்கிறார். படித்துச் சாதனைபுரிந்தவர் படைத்துச் சாதனைபுரிவது வாசகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். ஏழாவது அறிவு (மூன்றாம் பாகம்) என்னும் இந்நூலில் ஏராளமான கருத்துகளை இலக்கியம் மற்றம் பல்துறைச் சான்றுகளுடன் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார்.

ஓடும் நதியின் ஓசை (முதல் பாகம்) Add to donation

Image

தமிழ்நாடு முழுவதும் இலக்கிய ஆர்வமுடைய அனைவராலும் அறியப்பட்ட வெ. இறையன்பு தமிழ்நாடு அரசில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். 30 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார்

முதல் தலைமுறை Add to donation

Image

'எல்லோருக்கும் வாழ்வதற்கான பொருள் உண்டு. அதை அவரவர்தான் தேடி கண்டுபிடிக்க வேண்டும்' என்பதைப் பள்ளிப் பருவத்திலேயே உணர்ந்து விட்டேன். ஒவ்வொரு தோல்வியும் ஒரு சின்ன மரணம். ஒவ்வொரு அவமானமும் அதுதான். அவை பலரைச் சிதைக்கின்றன. சிலரைச் செதுக்குகின்றன. தோல்வியையும் துயரத்தையும் உறவுகளாக மாற்றிக் கொள்பவர்கள் தான் சிற்பமாகச் சிறப்படைகிறார்கள்.

STEPS TO SUPER STUDENTS Add to donation

Image

Iraianbu, author of Steps to Super Students, is well-known as an outstanding administrator and writer. He has earned a name for himself by identifying with social cause, and helping people solve their problems promptly and satisfactorily. He is a popular writer, both in Tamil and English, and his books published hitherto have been well-received and appreciated.

RANDOM THOUGHTS Add to donation

Image

‘Random Thoughts’ is a collection of 51 essays written by Thiru.V.Irai Anbu, a senior I.A.S. office of Tamil Nadu under a fortnightly column in the Madurai edition of THE HINDU Metroplus over 100 weeks.

பணிப் பண்பாடு Add to donation

Image

இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் முனைவர் வெ. இறையன்பு, இஆப அவர்களின் அற்புதப் படைப்பு. வானொலியில் உரையாற்றிய பல கருத்துக்களை 100 தலைப்புகளில் பத்து ரூபாய் விலையில் வர உள்ளது. முதல் தலைப்பாக “பணிப் பண்பாடு” என்ற தலைப்பில் இன்றைக்கு மிகவும் தேவையான பயனுள்ள பல கருத்துக்களைத் தாங்கி முதல் நூல் வெளி வந்துள்ளது. சிலர் பேச நன்றாக இருக்கும், ஆனால் அப்பேச்சை நூலாக ஆக்கிட முடியாது.நூலாக்கினால் நன்றாக இருக்காது. ஆனால் இந்நூல், நூலாக்கும் தரத்துடனேயே வானொலி உரையாக இருந்தால் நூலாகப் படிக்கும் போதும், இனிமையாக உள்ளது. வாசகர்களைச் செம்மைப் படுத்தும் சிறப்பான பணியினை செய்திடும் நல்ல நூல்.

அச்சில்

Image

இலக்கியத்தில் மேலாண்மை

அச்சம் தவிர்

திருவெம்பாவை

உணவு